ஜனாதிபதித் தேர்தலினை முன் வைத்து நடைபெற்ற கட்சித் தாவல்களினாலும்
அதன் பின் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இடம்பெற்ற கட்சித் தாவல்களினாலும் கிழக்கு
மாகாண ஆட்சி மகிந்த ராஜ பக்ஸ தலைமையலான சு.கா இனை விட்டு கை நழுவிச் சென்றுள்ளது.12-01-2015
ம் ஆண்டு கூட்டப்பட்ட கிழக்கு மாகாண சபை புதிய ஆட்சியுடன் மீண்டும் 20-01-2015
கூட்டப்படும் என கலைக்கப்பட்டுள்ளது.
யார் யார் சேர்ந்து ஆட்சியமைக்கப் போகிறார்கள்? யாருக்கு முதலமைச்சர்
பதவி வழங்கப்படப் போகிறது?
என்ற சர்ச்சைகள் கட்சிகளினுள் மீண்டும் தோற்றம் பெற்றுள்ளது.கிழக்கு மாகாண சபையில்
அதிக உறுப்பினர்களைக் கொண்ட வகையில் மு.கா (08) உம் த.தே.கூ (11) உம் சேர்ந்தாலே ஆட்சியமைக்கப் போதுமான அளவு ஆசனங்களைப் பெற்றுக்
கொள்ளலாம்.
தற்போது மு.கா மகிந்த ராஜ பக்ஸவுடன் சேர்ந்தாலும் ஆட்சியமைக்க
முடியாது,சேரவும் மாட்டாது போன்ற காரணங்களினால் த.தே.கூ முன்னர் போன்று முற்று முழுதாக முஸ்லிம்
காங்கிரசிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலைமை இருக்காது.இதன் காரணமாக
முதலமைச்சுப்,அமைச்சுப் பதவிகளினை தாங்கள்
பெறுவதற்கு சற்று முயற்சிக்கலாம்.எனினும்,தற்போதைய நிலைமையில் மு.கா,அ.இ.ம.கா உறவு
காரணமாக மு.கா இனை எதிர்த்தும் த.தே.கூ இற்கு ஆட்சி அமைக்கவும் இயலாது.த.தே.கூ
பதவிகளுக்கு சோரம் போகும் கட்சியும் அல்ல என்பதனை அதன் செயற்பாடுகள் உணர்த்தி
நிற்கின்றன.அனைத்துப் பதவிகளினையும்
பங்கிட்டு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.தற்போது த.தே.கூ இற்கு
வடக்கும்,கிழக்கும் சிறுபான்மையினரின் கைகளில் உள்ளது என சர்வதேசத்திற்கு காட்ட
வேண்டிய தேவை இருப்பதால் மு.கா தனது கோரிக்கைகளில் உறுதியாக இருப்பின் கேட்பதை
எல்லாம் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
தற்போது மு.கா இல் யாருக்கு
முதலமைச்சர்ப் பதவி வழங்குவது பொருத்தமானது..?
தற்போதைய நிலைமைகளை வைத்து ஒப்பு நோக்கும் போது முதலமைச்சர் பதவிக்காக
நசீர் ஹாபிஸ்,ஏ.எம் ஜெமீல்,எம்.ஐ.எம்
மன்சூர் ஆகிய மூவரிற்கிடையில் தான் அதிக போட்டி நிலவ வாய்ப்புள்ளது.இதில் நசீர்
ஹாபிசின் தற்காலச் செயற்பாடு காரணமாக அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கி அழகு
பார்க்க முடியாது எனச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.மு.கா தவிசாளர் அமைச்சு
விடயத்தில் எவ்வாறு மு.கா இனால்
புறக்கணிக்கப் பட்டாரோ அதனைப் போன்று இவரினையும் ஒதுக்க வேண்டும்.ஒதுக்கப்படுவார்
என நம்பவும் படுகிறது.
அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்யாது தலைமையின் கருத்தை
விமர்சித்தமை,மாகாண அமைச்சுப் பதவி வழங்கப்பட்டும் அது சம்மாந்துறை மக்களைத்
திருப்திபடுத்தாமை,முதலமைச்சர் பதவி வழங்கபட்டாலும் பாராளுமன்றத் தேர்தலில்
களமிறங்குவாரா? என்ற வினா, சம்மாந்துறை பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இம் முறை உறுதிப்படுத்தப்படும்
என்ற மு.கா தலைவரின் கூற்று சம்மாந்துறையில்
மு.கா இன் இருப்பை பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கொண்டே ஸ்திரப்படுத்தப் விளைகிறது
எனக் கூறுவது ,சம்மாந்துறை மக்களிடையே எவ்வாறேனும் இம்முறை பாராளுமன்றப் பிரதிநிதித்
துவத்தினைப் பெற வேண்டும் என்ற கருத்து நிலவுவது போன்ற கருத்துக்களினை ஆராயும்
போது இவரிற்கு முதலமைச்சர் பதவி
வழங்கப்படும் என்ற கூற்றினை வலுவிழக்கச் செய்கின்ற போதிலும் மன்ஹூம் அமைச்சர்
அன்வர் இஸ்மாயில் சம்மாந்துறையை தனது பூரண கட்டுக் கோப்பினுள் கொண்டு வர
முயற்சித்த போது,அமைச்சருக்கு எதிராக
உறுதியாக தன்னந் தனியே நின்று போராடி,மு.கா இனை விட்டும் அன்று தொடக்கம் இன்று வரை
சிறிதேனும் அகலாது மு.கா இனை கட்டியெழுப்ப
முயற்சித்து கடந்த மாகாண சபைத் தேர்தலின் போதே சம்மாந்துறை மக்களை முற்றாக மு.கா
பக்கம் திருப்பிய மன்சூரினையும் இவ்
விடயத்தில் மறந்து விட இயலாது.தொகுதி வாரி தேர்தல் முறைமை கொண்டு வரப்படுமாக
இருந்தால் சம்மந்துறைத் தவிசாளரின் தனிப்பட்ட வாக்கு வங்கி காரணமாக அது மு.கா
இருப்பினை சம்மாந்துறையில் கேள்விக்குறியாக்கும் என்பதனையும் இவ் விடயத்தில்
சுட்டிக் காட்ட விரும்புவதோடு மு.கா தலைமை இவ்விடயத்தில் அதிக கரிசனை கொள்ள வேண்டும்.
.
இவர்கள் இருவரும் தகுதி இல்லை என்பதால் ஏ.எம் ஜெமீலினை தகுதியானவர்
எனக் கூறி விட இயலாது.இருமுறை கிழக்கு
மாகாண சபையில் உள்ள அனுபவமிக்க ஒரே ஒருவர் என்ற வகையிலும்,சாய்ந்தமருது மக்கள் மு.கா
இற்கு அன்று தொடக்கம் இன்று வரை செய்த தியாகத்திற்கு மு.கா பதவி ரீதியாக
சாய்ந்தமருதினைக் கௌரவிக்காமை,விருப்பு வாக்கு அடிப்படையில் ஏ.எம் ஜெமீல் இவர்கள்
மூவரிலும் முதன்மை இடத்தில் இருப்பது,சாய்ந்தமருதிற்கான தனி உள்ளூராட்சி சபைக்
கோரிக்கையில் மு.கா இன் போக்கு சாய்ந்தமருது மக்களிற்கு திருப்தியளிக்காமையினால்
மு.கா மீது சலிப்புற்றிருப்பது,கடந்த முறை அமைச்சுப் பதவி ஏ.எம் ஜெமீலிற்கு
வழங்குவதற்கு சில நியாயமான காரணங்கள் இருந்தும் புறக்கணிக்கப்பட்டமை போன்ற
காரணிகளால் மு.கா தற்போது நலிவடைவதை மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமீல் தனது ஆளுமை
கொண்டு தடுத்து வைத்துள்ளார் அவரினை மேலும் பதவி கொண்டு அலங்கரிப்பது மு.கா இனை
வாழ்வித்த சாய்ந்தமருதில் மு.கா இன் இருப்பை மேலும் ஸ்திரபடுத்த உதவியாக அமையும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.