GuidePedia

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்கள் முடிவில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தென் ஆப்பிரிக்க அணி (124 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. அவுஸ்திரேலிய அணி (118 புள்ளிகள்) 2வது இடத்தையும், இங்கிலாந்து அணி (104 புள்ளிகள்) 3வது இடத்தையும், பாகிஸ்தான் அணி (103 புள்ளிகள்) 4வது இடத்தையும், நியூசிலாந்து அணி (99 புள்ளிகள்) 5வது இடத்தையும், இலங்கை அணி (96 புள்ளிகள்) 6வது இடத்தையும் வகிக்கின்றன.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வி கண்ட இந்திய அணி (95 புள்ளிகள்) 6வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு பின்தங்கி இருக்கிறது.
துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை வீரர் சங்கக்காரா (909 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்சை (908 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சங்கக்காரா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பந்து வீச்சு தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் முதலிடத்திலும், அவுஸ்திரேலிய வீரர் ரையான் ஹாரிஸ் 2வது இடத்திலும், இலங்கை வீரர் ஹெராத் 3வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 4வது இடத்திலும், அவுஸ்திரேலிய வீரர் ஜான்சன் 5வது இடத்திலும் உள்ளனர்.
சகலதுறை ஆட்டக்காரர் வரிசையில் வங்கதேச வீரர் ஷகிப் அல்-ஹசன், தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர், இந்திய வீரர் அஸ்வின் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர்.



 
Top