GuidePedia

வடகிழக்குப் பகுதிகளில் முப்படைகளுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டுள்ள மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான காணிகளைத் தவிர ஏனைய காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
முப்படைகளின் தளபதிகளுக்கும் ஜனாதிபதி இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முப்படைகளின் தளபதிகளும் குழுவொன்றை அமைத்து, உண்மையான காணி உரிமையாளர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களையும் வடகிழக்கிற்கு அனுமதிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



 
Top