GuidePedia

(க.கிஷாந்தன்)
பதுளை, மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காகல பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தை பொலிஸார் 21.01.2015 அன்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர், அந்த வாகனத்தை வீட்டுக்கு ஓட்டிவந்த சாரதி ஆகியோரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வாகனம், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்துக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். 



 
Top