GuidePedia

புத்தளத்துக்கு தேர்தல் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் கணவு பல தசாப்தமாக அடைய முடியாமல் போனது.முஸ்லிமகள் செறிந்துவாழும் புத்தளம் டவுனில் பல கட்சிகள்,சுயேட்சை அணி போட்டியிடுவதே இதற்கு காரணம்.
இதற்கு முடிவுகட்டி பாராளுமன்ற கணவு சாத்தியமாக வேண்டும் எனில் இரு பிரதான கட்சிகளுக்குள் சில விட்டுக்கொடுப்பும் ஒன்றினைவும் தேவைப்படுகிறது.புத்தளத்தில் புத்தள டவுன் எல்லைக்குள் மட்டுமில்லாது முழு மாவட்டத்திலும் பரவலாக ஆதிக்கம் உள்ள ஒருவர் என்றால் அது பாயிஸ் அவர்களே.ஆனாலும் இவர் தனித்து நின்று வெற்றிபெறுவது சாத்தியம் இல்லை என்பதுபோல ஏனைய கட்சிகளும் தனித்து நின்று வெற்றிபெற முடியாது .
எனவே பாயிஸ் அவர்கள் எந்த கட்சியில் நின்று கேட்டாலும் அவருடன் முஸ்லிம் காங்கரஸ் அல்லது வெற்றிபெற தேவையான மேலதிக கணிசமான ஓட்டுக்கள் உள்ள ஒரு தரப்புடன் இணைந்து ஒருவர் போட்டியிட வேண்டும்.வெற்றியின் பின் பாராளுமன்ற உறுப்புரிமையை சரிபாதியாக இரண்டரை வருடம் இரண்டரை வருடம் என்று இருவரும் பிரித்துக்கொள்ள முடியும் அல்லது அவர்கள் விரும்பும் காலப்பகுதியை தேர்ந்தெடுக்க முடியும்.அதன் ஊடாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போவதைவிட இப்படியான ஒரு நிலை சிறந்தது என்று எண்ணுகிறேன்.
(அஹ்மத் ஜம்ஷாத்)



 
Top