அண்மையில் இடம் பெற்ற ஆட்சி மாற்றத்திற்கான கட்சித் தாவல்களினால் கிழக்கு
மாகாண சபையினை ஆட்சி செய்து கொண்டிருந்த மகிந்த தலைமையிலான சு.க ஆட்சி எதிரணி
பக்கம் சென்றுள்ளது.இதன் போது TNA(11),SLMC(08),UNP(4),மைத்திரி
பக்கம் ஒரு உறுப்பினரும் என காணப்படுகின்றனர்.
இதன் போது மு.கா உறுப்பினர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண சபை மு.கா
குழுத் தலைவருமான ஏ.எம் ஜெமீலிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கு அனைத்து
அரசியற் கட்சிகளும் உடன்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தகவல்
தெரிவிக்கின்றன.இது எங்கே?தன் அரசியல் இருப்பைப் பாதித்து விடுமோ என மு.கா
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் துடி துடித்து திரிவதாகவும் இதனைத் தடுப்பதற்கு
மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் தங்களோடு அழைத்துக் கொண்டு கிழக்கு
மாகாண சபையினைக் கலைக்குமாறு மு.கா தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அறிய
முடிகிறது.
இவர் இதற்கு சில மாதங்கள் முன்பும்
கிழக்கு மாகாண உறுப்பினர் ஏ.எம் ஜெமீல் உட்பட இரண்டு கிழக்கு மாகாண சபை
உறுப்பினர்களை குறி வைத்து தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும்,தனக்கு
அரசியலமைப்பை மாற்றி முதலமைச்சை தருமாறும் அதற்கு பகரமாக மு.கா ஆதரவை தான்
அரசிற்கு வழங்குவதற்கான வழி வகைகளினை செய்து தருவதாகவும் அரசிடம் நேரடிப் பேச்சு
வார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக கதைகள் கசிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனை
அவர் மறுத்திருந்த போதும் அவரின் இச் செயற்பாடு அவர் இவ்வாறு நடந்துள்ளார் என்பதனை
மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது.
மீண்டும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒன்றினை நடாத்தக் கோருவதற்கான
தேவைப்பாடு தான் என்ன?என்பதனை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மக்களிடையே
வெளிப்படுத்த வேண்டும்(தான் செயற்படும் விதத்தினை மாற்றியே தனது கருத்தினை இவர்
மக்களிடையே பரப்புவார்).த.தே.கூ இனைப் பொறுத்த மட்டில் கிழக்கு மாகாண சபையினைக்
கலைப்பது தனக்கே எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் நிச்சயமாக கலைக்க
விரும்பாது.அதனையும் தாண்டி கிழக்கு மாகாண சபை கலைக்கப்ப்படுமாக இருந்தால் அதற்கு
முஸ்லிம் காங்கிரசே பொறுப்பேற்க வேண்டும்.
முஸ்லிம் காங்கிரசினுள் தங்கள் சுயநலத்திற்காக சக உறுப்பினர்களுக்கு
குழி பறிக்கும் இவ்வாறானவர்களை மு.கா தலைவர் அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை
எடுப்பதே கட்சியின் எதிர்கால நலனிற்கு சிறப்பாக அமையும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.