GuidePedia


ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல் நடவடிக்கைகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு சம்பவங்களும், வாக்களிப்பு காலங்களில் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தேர்தல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் அனைத்து பிரதேசங்களுக்கும் உயரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் அஜித் ரோஹன இதன்போது குறிப்பிட்டார். 



 
Top