அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வீராட் கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் அவர் இன்று தனது 4–வது சதத்தை பதிவு செய்தார்.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் அவர் முதல் இன்னிங்சில் 115 ஓட்டங்களையும், 2வது இன்னிங்சில் 141 ஓட்டங்களையும், மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்டில் 169 ஓட்டங்களையும் எடுத்தார். தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்டில் 4–வது சதத்தை எடுத்து முத்திரை பதித்தார்.
தலைவர் பதவியில் 3–வது சதத்தை எடுத்தார். அடிலெய்டு டெஸ்டில் அவர் முதல் முறையாக தலைவர் பொறுப்பை ஏற்றார். தலைவர் பதவியில் அவர் சந்திக்கும் 2–வது போட்டி சிட்னி டெஸ்ட் ஆகும்.
33–வது டெஸ்டில் விளையாடும் வீராட் கோலிக்கு இது 10–வது சதமாகும். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 6–வது சதத்தைப் பதிவு செய்தார்.
மேலும் இந்த டெஸ்ட் தொடரில் கோலி 630 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு ராகுல் டிராவிட் 4 டெஸ்டிலும் சேர்த்து (8 இன்னிங்ஸ்) 619 ஓட்டங்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.
இதை கோலி முறியடித்தார். அவர் 4 டெஸ்டில் 7 இன்னிங்சில் 630 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்களை எடுத்த இந்தியர் என்ற சாதனையை புரிந்தார். இதில் 4 சதமும், ஒரு அரை சதமும் அடங்கும்.
