நாட்டில் நடைபெற்ற பயங்கரவாத யுத்தம் காரனமாக வன்னி மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வாழ்ந்துவரும் மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனாதிபதி பொது வேற்பாளர் மைத்திரி பால சிறிசேன அவர்களை வெற்றிபெறவைத்து தமது உரிமையை, சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக இன்று தமது சொந்த மண்ணிற்கு வருகைதந்து அதிக ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இவ்வாறு இவர்கள் வாக்களிக்க வரும் வழியில் பல்வேறு தடங்கள் மற்றும் இடையுருகள் ஏற்படுத்தப்பட்ட போதும் அவ்வாரான தடைகளைத் தகர்தெரிந்து துணிச்சலுடன் வந்து வாக்களித்ததையிட்டு நான் அவர்களையும், இந்த நாட்டின் அன்மைக்கால அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமாதாணம், சௌபாக்கியம் நிறைந்த புதிய ஆட்சியை எற்படுத்தவேண்டுமென்ற நோக்கில் ஜனாதிபதி பொது வேற்பாளர் மைத்திரி பால சிறிசேன அவர்களுக்கு வாக்களித்த இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் ஐ.தே.கா வின் வன்னி மாவட்ட பிரதம அமைப்பாளர் என்ற வகையிலும், இந்த நாட்டில் புதிய ஆட்சியை ஏற்படுத்த மைத்திரியை தமிழ்பேசும் மக்கள் சார்பில் முதலாமவனாக ஆதரித்தவன் என்றவகையிலும் எனது மனப்புர்வமான வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என எமது முகநூல்தளத்திட்கு வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.
