வாக்காளர்கள் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு திரளாக சென்று மிகச் சுறுசுறுப்புடன் வாக்களித்துவிட்டு செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இம்முறை வாக்களிப்பு நிலையங்களில் கடந்த காலங்களை விட கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும், நிலையங்களுக்கு அருகாமையிலும் வீதிகளிலும் பொலிஸார் அதிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் சிவில் உடையிலும் காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


