இலங்கை ஜனநாயக குடியரசின் எட்டாவது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் இடம்பெறுகின்றன.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமுகமான முறையில் இடம் பெறுவதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் தொடர்பான தகவல்களை எமக்கு வழங்கியிருந்தார் அலுவலக செய்தியாளர் இராசதுரை ஜெயரூபன்.
