GuidePedia

தேர்தல் பிரச்சாரத்திற்கு  வீடுவீடாக சென்ற பிரதேச அரசியல்வாதி ஒருவர் ஒரு வீட்டில் இருந்த யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று யக்கமுள்ள பிரதேசத்தில் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காலி - யக்கமுள்ள பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ஆனந்த விக்ரமநாயக்க என்பரே இந்த குற்றச்சாட்டில் சிக்கி உள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.
பிரதேச பாடசாலை ஒன்றில் அதிபராகவும் கடமையாற்றும் குறிப்பிட்ட நபர் வீடொன்றுக்கு தேர்தல் பிரச்சாரம் சென்ற வேளை தனியாக இருந்த 14 வயது பெண்பிள்ளை ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக பொலிசில் முறைப்பாடு செய்யபட்டு அவர் காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் மேலும் போலீசார் தெரிவித்தனர்.




 
Top