GuidePedia

இன்றைய பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் சராசரியாக 65 வீதமான வாக்குககள் பதியப்பட்டிருப்பதாக தெரிவத்தாட்சி அதிகாரிகளின் கூற்றுக்களை ஆதாரம் காட்டி தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை,  தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையிலும் நீதியானதாகவும் நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் இன்று கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் அதிகமானவை கடைசி மணித்தியாலயத்திலேயே கிடைக்கப் பெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்பதுடன் சிறிய சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளே கிடைக்கப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.



 
Top