புதிய அமைச்சரவை நாளை சத்தியப் பிரமாணம் செய்யலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெறும் எனத் தெரியவருகின்றது.
எதுஎவ்வாறு இருப்பினும் கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் இம்முறை மாறுபடலாம் எனக் கூறப்படுகின்றது.
விஷேடமாக முக்கிய சில அமைச்சுப் பதவிகள் இவ்வாறு மாறுபடவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
