ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு கொண்டு செல்வதற்கான தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பதில் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அமைக்கப்படும் அரசாங்
கம் எந்தவகையில் அமையும் என்பது குறித்து ஆலோசிப்பதற்கு ஐந்து பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
கம் எந்தவகையில் அமையும் என்பது குறித்து ஆலோசிப்பதற்கு ஐந்து பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றின் அடிப்படையில் இந்த அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.