GuidePedia

காத்தான்குடியில் நேற்று (21) ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரில் பார்வையிட மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் இன்று காத்தான்குடி விஜயம் செய்ததாகவும் அங்கு வருகை தந்த அவர் தமது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்ததாகவும் ஹிஸ்புல்லாவின் வன்முறையால் பாதிப்புக்குள்ளான பிரதேச அரசியல் கட்சி தகவல் தெரிவித்துள்ளது.
இதன்போது தமது கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவலாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் தமது காரியாலயாலயத்தில் திரண்டு இருந்ததாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, நேற்றைய தினம் தேசியப்பட்டியல் நியமனம் பெற்றதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களை ஏவிவிட்டு வன்முறையில் ஈடுபட்டதாக பிரதேச முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top