GuidePedia

(க.கிஷாந்தன்)
ஹெரணையிலிருந்து அட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று 22.08.2015 அன்று காலை 07.30 மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வூட்லேண்ட் பகுதியில் பிரதான வீதியை விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 30 பேரில் 13 பேர் படுங்காயம்பட்டு வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சாரதிக்கும் ஏனைய 17 பேருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் இதில் சிறுவர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









 
Top