GuidePedia

இலங்கையில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் இன்றைய தினம் இனக்கலவரமொன்றை உருவாக்கி வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் சதித்திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் செல்வாக்கு இழந்து போயுள்ள மஹிந்த அன்ட் கோ போலிக் குண்டுகளை வெடிக்க வைத்து புலிப்பூச்சாண்டி காட்டி பொதுமக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முதலில் திட்டமிட்டிருந்தனர்.
எனினும் விடயம் ஊடகங்களுக்கு கசிந்து விடயம் அம்பலமாகிப் போனதால் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை அளிக்கவில்லை.
இந்நிலையில் கடைசி அஸ்திரமாக இன்று இனக்கலவரமொன்றைத் தூண்டி வாக்களிப்பை தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள மஹிந்த தரப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்காக பயிற்சியளிக்கப்பட்ட சிலர் இன்று கொழும்பில் முஸ்லிம்கள் போன்று வேடமணிந்து இனக்கலவரத்தை தூண்டும் வகையில் களமிறக்கப்படவுள்ளனர்.
அதன் மூலம் உருவாகும் பதற்றத்தைத் தூண்டிவிட்டு நாடு முழுவதும் இனக்கலவரத்தை தோற்றுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சதித்திட்டத்தின் பின்னணியில் ஜேவிபியில் இருந்து பிரிந்து தனிக்கட்சியொன்றை ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் செயற்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

(பிரபல தமிழ் இணையத்தளமொன்றில் வெளியான இந்த தகவல் உண்மையோகவோ பொய்யாகவோ இருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இங்கு பதிவிடுகிறோம்.)



 
Top