பொது தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை கடந்த 14ம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யுமாறு தேர்தல் சட்டத்திற்கமைய அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் விமல் வீரவன்சவின் இணையத்தளம் ஊடாக இதுவரையிலும் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முன்னாள் பொது செயலாளரின் காணொலி ஒன்று நேற்று இரவு குறித்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த காணொலியில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறும் இவ்வறான நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதனை குறித்து இந்நாட்டு மக்கள் மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டும்.
