GuidePedia

மோசடிகாரர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் அவர்களிடமிருந்து பயன் பெற்றுக் கொண்டவர்களேயாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது எனக் கோரி அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள், மோசடிகளில் ஈடுபட்டவர்களிடமிருந்து பயன்பெற்றுக் கொண்டவர்களேயாகும்.
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட போது இவர்கள் போராட்டம் எதனையும் நடத்தவில்லை.
பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்ட போதிலும் போராட்டம் நடத்தியிருந்தார்கள்.
போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் பணத்திற்காக கத்துவோரேயாகும்.
நல்லாட்சி அரசாங்கம் குற்றவாளிகளை தண்டிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் கோசமிடுகின்றன.
தண்டனை விதிக்க முயற்சித்தால் அதனையும் தடுக்கின்றன.
சரத் பொன்சேகா போரை முடிவுறுத்த பங்களிப்புச் செய்த படைத்தளபதி அவர் கைது செய்யப்பட்ட போது இந்த தேசப்பற்றாளர்கள் எங்கிருந்தார்கள் என ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



 
Top