சிறுபான்மை மக்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றத்தின் போது பெரும்பான்மை சமூகத்தைப் போன்றே சிறுபான்மை சமூகத்திற்கும் நியாயம் கிட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் அது ஓர் சுபமான விடயமாக கருதப்பட்டிருக்கும்.
எனினும், 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த விடாது எதிர்க்கட்சிகள் தடை ஏற்படுத்தி வருகின்றன.
திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த 27ம் திகதி வரையில் கால அவகாசம் கோரப்பட்டது.
கோல் அடிப்பதற்கு செல்லும் போது கோல் கம்பத்தை வேறும் இடத்திற்கு எடுத்துச் செல்வது போன்று எதிர்க்கட்சிகள் 19ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்தை காலம் தாழ்த்தி வருகின்றன.
தேர்தல் முறைமை மாற்றத்தின் போது பிரதான இரண்டு கட்சிகளினதும் தேவைகள் மட்டும் கருத்திற்கொள்ளப்படக் கூடாது.
ஏனைய கட்சிகள் ஏனைய இன சமூகங்களினதும் கருத்துக்கள் கோரப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
