GuidePedia

(க.கிஷாந்தன்)
நுவரெலியா, பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்ட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலையின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பகுதியில் மறைந்திருந்தபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பூண்டுலோயோ பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் மற்றும் மகள் ஆகியோரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த சந்தேகபர் 20.04.2015 அன்று பூண்டுலோயாவில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.

தீவிர தேடுதலில் ஈடுபட்ட பூண்டுலோயா பொலிஸார் சந்தேகநபரை 21.04.2015 அன்று அதிகாலை 3 மணியளவில் தலவாக்கலையில் உள்ள வீடொன்றில் கைது செய்ததாக பூண்டுலோயா பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

சந்தேகநபர் குற்றச்செயலுக்காக பயன்படுத்திய கத்தி மற்றும் சம்பவம் இடம்பெற்றபோது அவர் அணிந்திருந்த ஆடைகள் என்பவற்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இரட்டைக் கொலையின் சந்தேகநபரான மகன் 21.04.2015 அன்று நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்தி



 
Top