முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விசாரணைகளின் பொருட்டு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்துக்கு அருகில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயம் என்பதையும் மீறி அங்கு பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்து செல்லும் படி பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அதையும் மீறி அவர்கள் தொடர்ந்து அவ்விடத்தில் இருந்து கோஷங்களை எழுப்பிய வண்ணமுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அப்பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற உத்தரவையும் மீறி அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.
