GuidePedia


உங்களின் ஆண்ட்ராய்டு ஃபோன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க வேண்டுமா..?
இருந்த இடத்தில் இருந்தே அதை ஒலி எழுப்ப வைக்க வேண்டுமா..?
பூட்ட வேண்டுமா..?

தரவுகளை அழிக்க வேண்டுமா..?இதோ ஒரு எளிமையான வழி.
வேறொரு அலைப்பேசியில், பிளே ஸ்டோரில் இருந்து android device management என்ற செயலியை (apps)பதிவிறக்கம் செய்து திறங்கள். தொலைந்துபோன அலைப்பேசியில் நீங்கள் பயன்படுத்திய ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள்நுழைவு(login) செய்யுங்கள்.
இப்போது தொலைந்துபோன அலைப்பேசி எந்த ஊரில் உள்ளதென்று வரைபடத்தில் தெரியும். பக்கத்தில் உள்ள Ring அழுத்தினால் அலைப்பேசி ஒலிக்கும்.(சைலண்ட் மோடில் இருந்தாலும்)lock அழுத்தி பூட்டலாம் அல்லது erase(Restore ) கொடுத்து தரவுகளை அழிக்கலாம்.
நினைவக அட்டையில்(memory card) உள்ளது அழிமா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்.
கணினியில் இந்த [You must be registered and logged in to see this link.] முகவரிக்கு சென்றும் இதை செய்யலாம்.
*கவனமாக செயல்படுங்கள்.



 
Top