(க.கிஷாந்தன்)
தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யாமல் தொகுதி வாரி தேர்தல் முறைக்கு சென்றால் மலையக மக்களின் அரசியல் இருப்பு பெரும் கேள்விக்குறியாகிவிடும் என மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
விதாசார தேர்தல் முறையில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்திப்பதற்காக இன்னொரு குறைபாடுடைய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி அதை மக்களிடம் தினிக்க முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை பல்லின மக்களை கொண்ட நாடு. தேர்தல் முறையை மாற்ற மேற்கொள்ளப்படும் தேசிய ரிதியிலான முடிவுகள் சகல தேசிய இனங்களினதும் வீதாசாரத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும.; இதற்காக புதிய பொறிமுறை ஒன்றை உறுவாக்கி அதன் மூலம் சிறுபாண்மை மக்களின் சம்மதம் பெறப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும்.
இலங்கையில் கடைசியாக 1974ம் ஆண்டு நேயன் தித்தவெல கமிசனால் தேர்தல் தொகுதிகள் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட போது இந்திய வம்சாவளி மக்கள் பல தொகுதிகளில் பெரும்பாண்மையாக வாழ்ந்தாலும் எந்தவெரு தொகுதியிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்யக் கூடிய அளவில் வாக்கு பலத்தை கொண்டிருக்கவில்லை. ஆனால் அந்த காலப்பகுதியில் நுவNலியா தேர்தல் தொகுதியும்ää மஸ்கேலியா தேர்தல் தொகுதியும் வௌ;வேறு தனித்தொகுதிகளாக இருந்தன. இவ்விரண்டு தொகுதிகளையும் இணைத்தால் சுமார் முப்பதாயிரத்திற்கும் சற்று அதிகமான தமிழ் வாக்குஇருந்தன. ஆதனால் இந்த இரண்டு தொகுதிகளையும் இணைத்து இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்குமுடியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் சௌமிமூர்த்தி தொண்டமான் அவர்களால் எல்லை நிர்னய கமிசனுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதன் பயனாக நுவரேலியா மஸ்கேலியா தொகுதி மூன்று அங்கத்தவர் தொகுதியாக உறுவாக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகள் குறைவாக இருந்த அந்த காலக்கட்டத்தில் நேயன் தித்தவெல கமிசனின் இந்த தீர்மானம் பொருத்தமானதாகவே இருந்தது. ஆனால் தற்போது மூன்று லட்சம் வாக்குகளை அன்மித்துவிட்ட 2015ம் ஆண்டில் அதே மூன்று அங்கத்தவர் தொகுதிக்குல்; நுவரேலியா மாவட்ட இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்த முணைவது மாற்றத்தை விரும்பிய தமிழ் மக்களுக்கு அநியாயத்தை பரிசாக வழங்கும் நடவடிக்கையாகும். இந்த பிரேரணைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அனுமதி வழங்கமாட்டார் என உறுதியாக நம்புகிறோம்.
அதே போல பதுளை, கண்டி, கொழும்பு, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் தொகுதிகளை உறுவாக்க கூடியஅளவிற்கு இந்திய வம்சாவளி மக்களின் வாக்கு பலமும், பிரதேசமும் அமைந்து காணப்படுகின்றது. ஆனால் 160ற்கு அதிகமான தேர்தல் தொகுதிகளை உறுவாக்க முடியாது என ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தை பெரும்பாண்மை கட்சிகள் முன்வைக்கின்றன. 160 தொகுதிகள் என்பது வேதமோ, பைபிலே அல்லது குரானே கிடையாது. 1974ம் ஆண்டிற்கு பின்புதான் இந்திய வம்சாவளி மக்களின் பறிக்கப்பட்ட குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டு வாக்காளர் தொகை அதிகரித்தது. எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலை தொகுதிவாரியாக நடத்த கோருபவர்கள் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைக்கு விசேடமாக கவணம் செலுத்தி புதிய தேர்தல் தொகுதிகளை உறுவாக்க பொறிமுறை ஒன்றை உறுவாக்க முன்வரவேண்டும்.
சிறுபாண்மை மக்களின் நியாயமான கோரிக்கைகளை புரம்தள்ளிவிட்டு தற்போது திட்டமிடப்பட்டுள்ள தேர்தல் தொகுதி முறையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கு எதிராக எடுக்க வேண்டிய சகல வழிகளையும் ஆராயவேண்டிய நிலை ஏற்படும். இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானிடம் விரிவாக கலந்துரையாடி முடிவெடுக்கப்படும். எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
