GuidePedia

(க.கிஷாந்தன்)
ஹட்டன் - நோட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் உட்பட பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனா்.

ஹட்டன் நகரில் உள்ள கோழி கடைகளிலும் கோழி பண்ணையிலும் மீதிப்படுகின்ற கோழி கழிவுகளை லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று இவ்வாறு குறித்த பகுதியில் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேரங்களிலேயே கழிவுகளை இவ்வாறு வீசுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனா்.

இவ்வாறு கழிவுகளை வீசுவதனால் சூழல் மாசடைகின்றமையும் குறிப்பிடதக்கது.

அத்தோடு பயனம் செய்யும் பயணிகளும் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றமை சுட்டிக்காட்டதக்க விடயமாகும்.

இந்த கழிவுகளை நாய்கள் மற்றும் பறவைகள் இழுத்து வீதிகளில் போடுகின்றமை குறிப்பிடதக்கது.

இதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச வாசிகள் உட்பட பயணிகளும் கோரிக்கை விடுக்கின்றனா்.



 
Top