GuidePedia

பாராளுமன்றத்தில் பேசவேண்டிய பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்களுடன், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், விவசாயிகளை மத்திய அரசு புறக்கணிப்பதாகவும், எனவே விவசாயிகள் பிரச்சினையை பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தொடர்ந்து எழுப்பும் என்றும் கூறினார்.
பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாக தெரிவித்தார்



 
Top