எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை வலுப்படுத்தி, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மருதானையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இனவாதத்தை தூண்டி அதன்மூலம் அரசியல் செய்த காலத்திற்கு புதிய அரசாங்கத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்தலொன்றுக்கு தயாராகிவரும் இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சிலர் மீண்டும் இனவாதத்தை கிளப்பி அரசியல் செய்ய முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலை தொடர்ந்து மஹிந்தவின் குழுவினர் வலுப்பெற்றால், அது முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் பெரும் ஆபத்தாக அமையும். எனவே ஐ.தே.கட்சியை வலுப்படுத்த வேண்டும். அப்போது தான் எமக்கு ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும் எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
