சோமவன்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகியதை அடுத்து அவரின் இத்தீர்மானம் குறித்து அரசியல் மேடைகளில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அவர் புதிய கட்சி ஒன்றை உருவாக்கபோவதாகவும், தம்மால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் தலைமைத்துவம் குறித்து எதிர்வரும் சம்மேளன கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தான் ஸ்தாபிக்கவுள்ள புதிய கட்சி நாட்டிலுள்ள பிரதான இரு கட்சிகளுக்கும் ஆதரவு வழங்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியுடன் மோதலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் தனக்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
