GuidePedia


அதிக கட்டணம் வசூலிக்கப்படு வதை கண்டித்து பெரம்ப லூர் மார்க்கெட்டில் நேற்று வியாபாரிகள் கடைகளை அடைத்து, கலெக்டர், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர் காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி மூட்டைகளுக்கு, அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, வியாபாரிகள் நேற்று கடையடைப்பு நடத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இங்குள்ள கடைகளுக்கு திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆட்டோ, வேன் மற்றும் லாரிகள் மூலம் நாள்தோறும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இந்த வாகனங்களுக்கு நுழைவு கட்டணமாக இதுவரை நாள் ஒன்றுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் குத்தகை எடுத்துள்ள குத்தகைதாரர்கள் கடந்த சில நாட்களாக வாகனங்களில் வரும் காய்கறிகளுக்கு கிலோ ஒன்றுக்கு 80 காசு வீதம் வசூல் செய்வதாகவும், 2006ம் ஆண்டு முதல் காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் தொழில் வரி வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, நகராட்சி ஆணையர், தாசில்தார் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.



 
Top