புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வௌ பகுதியில் சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை, பிரேத பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் தந்தையும், சித்தியும் இணைந்தே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளமை விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சிறுவனின் தாய் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளதாகவும், தந்தை மற்றும் சித்தியின் பாதுகாப்பில் சிறுவன் வளர்ந்து வந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
