GuidePedia

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியின் விஜயத்தின் போது 06 உடன்படிக்கைள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இவ்விஜயத்தின் போது பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளரையும் சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்க பாகிஸ்தான் அரசாங்கம் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, இம்மாதம் இறுதியில் ஜப்பானுக்கு விஜயம் செய்யவிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் அவர், அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இந்தியா, பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன் பாகிஸ்தானுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



 
Top