GuidePedia

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நிதியமைச்சு விரைவில் அதிகாரிகள் குழு ஒன்றை, சீசெல்ஸ் நாட்டுக்கு அனுப்பவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் குழு, சீசெல்ஸ் அதிகாரிகளுடன் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டுள்ள நிதிகள் குறித்து ஆராயவுள்ளனர்.
இந்தநிலையில் சுமார் 64 இலங்கையர்கள் மாத்திரமே உள்ள சீசெல்ஸில் 2011ஆம் ஆண்டு இலங்கை வங்கியின் கிளையை திறந்தமைக்கான காரணம் குறித்து மத்திய வங்கியும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றியே சீசெல்ஸ் வங்கிக் கிளை திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.



 
Top