முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம், மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவன்காட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பாகவே, இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக, புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே கோட்டாவின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
