GuidePedia

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம், இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
புதிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட குறித்த திருத்தச் சட்டம், கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து குறித்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும், நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
குறித்த மனுக்கள் மீதான விசாரணை பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட குழுவால், கடந்த முதலாம் திகதியிலிருந்து 6ஆம் திகவரை நடைபெற்றது.
அதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த 6ஆம் திகதி பிற்பகல், சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை, 19ஆம் திருத்தச் சட்டம் குறித்து பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டு ஒரு முடிவு எட்டப்படும்.




 
Top