GuidePedia


மகிந்தவின் கீழ் மோசடி செய்த அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் விடையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த அறிக்கை பிரதமரிடம் நேற்று கையளிக்கப்பட்டிருந்தது. 

இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மோசடியில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பதற்கு சிலத்தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

ஆனால் அவர்களின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை என்றும், குற்றம் புரிந்தவர்கள் யாராயினும் அவர்கள் சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.



 
Top