மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க பதவி விலகியமை, கட்சிக்கு பாரிய இழப்பாகுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ண தெரிவித்துள்ளார்.
சோமவன்சவின் பதவி விலகல் குறித்து ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த அவர், இதனைக் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு மிக்பெரும் பலமாக அமைந்திருந்த சோமவன்ச, அனைத்து தரப்பினரையும் இணைக்கும் வல்லமை பொருந்தியவர். இந்நிலையில், அவர் பதவி விலகிச் சென்றமை கட்சிக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பாகவே கருதப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து விலகிச்சென்ற சோமவன்சவை மீண்டும் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டாலும், தான் மீண்டும் கட்சியில் இணைந்துகொள்ள மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
