(க.கிஷாந்தன்)
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா டீ சைட் தோட்ட பகுதியில்; 19.04.2015 அன்று மாலை வேளையில் குளவி கொட்டியதால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிந்தவேளையில் தேயிலைப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு இவ்வாறு தொழிலாளிகளை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பாதிக்கப்பட்ட 18 பேரில் ஆறு பேர் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் 12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


