லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னால் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், பயன்படுத்தியதாக கூறப்படும் மாற்றங்கள் செய்யப்பட்ட சிங்க கொடியினால் சிறுபான்மைச் சமூகத்தின் மனம் நொந்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாக முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இச்சம்பவத்துக்காக தான் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
