GuidePedia

சிங்கக் கொடியை என்னுடைய கையில் வேறு ஒரு தரப்பினர் கொண்டு வந்து தந்தபோது, அது மாற்றம் செய்யப்பட்ட சிங்கக் கொடி என்பதை அப்போது தன்னால் இனங்கண்டுகொள்ள  முடியவில்லையென  தூய ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெறற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து ஆணைக்குழுவுக்கு முன்னால் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் நாட்டின் சட்டத்திலுள்ள சிங்கக் கொடியல்லாத மாற்றம் செய்யப்பட்ட கொடியொன்றைப் பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் அரசாங்கம் உடன் விசாரணை நடாத்த வேண்டும் எனக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top