கம்பளை இல்லவதுரை பகுதியில் மஹாவலி கங்கையில் இன்று 06. 04.2015 முற்பகல் 11.30 மணியளவில் மூன்று மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் இருவர் காப்பாற்றப்பட்ட நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை ஸாஹிரா கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மஹாவலி கங்கையில் நீராடுவதற்கு சென்ற வேளையில் இக்கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இம்மாணவர்கள் நீராடிக்கொணடிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்ற வேளை நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
இச்சம்பவத்தில் நீரில் மூழ்கிய மாணவர் கம்பளை மரியாவத்தைபகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வரும் நிலையில் பிரதேசிவாசிகள் கம்பளை பொலிஸாரின உதவியுடன் தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.
