(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ செப்பல்டன் தோட்ட பிரதேசத்தில் 09 ஏக்கர் நிலபரப்பினை கொண்ட மாணிக்ககல் சுரங்கம் 237மில்லியன் ரூபாய்கு ஏலம்மிடபட்டுள்ளதாக இரத்தினகல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பணிப்பாளர் ஜீ.டபிள்ய10 அமரசிரி தெரிவித்தார்.
அண்மைகாலத்தில் அதிகளவில் ஏலமிடபட்ட சுரங்கம் இதுவென அதிகாரசபையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஏலவிற்பனை கடந்த 02ம் திகதி ஹட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.
இதற்கு முன்னதாக கதிர்காமம், தம்மென்னாவ, பிரதேசத்தில் இணங்காணப்பட்ட மாணிக்ககல் சுரங்கம் 270மில்லியன் ரூபாய்கு விற்பனை செய்யபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
இந் நிலையில் தற்சமயம் குறித்த மாணிக்ககல் சுரங்கத்தின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக இரத்தினகல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பணிப்பாளர் ஜீ.டபிள்ய10 அமரசிறி மேலும் தெரிவித்தார்.

