GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவிடம், லஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடத்தவுள்ளது.
அவன்கார்ட் மற்றும் ரக்ன லங்கா ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பிலேயே கோட்டா, விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளர்.
இன்றைய தினம் மட்டுமன்றி எதிர்வரும் 27ஆம் திகதியும், கோட்டாவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டபோதும், அதனை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஆணைக்குழுவின் அதிகாரிகள் மஹிந்தவின் வீட்டிற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதாகவும் மஹிந்த ஆணைக்குழுவில் முன்னிலையாக அவசியமில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினமும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாமென கருதி, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்பு ஆர்ப்பாட்டமோ பேரணியோ நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதேவேளை மஹிந்தவின் மற்றுமொரு சகோதரரான பஷில் ராஜபக்ஷ, நேற்றைய தினம் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top