இளைஞர் காங்கிரஸ்
டெல்லியில் நேற்று முன்தினம் ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தை கண்டித்து, டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். வீட்டை சுற்றிலும் போலீசார் தடுப்பு அமைத்து அவர்களை தடுத்தனர். இதையடுத்து, கெஜ்ரிவால் உருவ பொம்மையை காங்கிரசார் எரித்தனர்.
பா.ஜனதா
டெல்லி பா.ஜனதாவும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நேற்று போராட்டம் நடத்தியது. இதற்காக, ஷாகிதி பூங்காவில் இருந்து டெல்லி போலீஸ் தலைமையகத்துக்கு ஊர்வலமாக சென்றது. அங்கு தடுப்புகளை மீறிச்செல்ல முயன்றபோது, பா.ஜனதாவினர் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

மேலும், மாநில பா.ஜனதா தலைவர் சதீஷ் உபாத்யாயா உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சதீஷ் உபாத்யாயா கூறுகையில், ‘இது தற்கொலை அல்ல, சதி. தூண்டிவிடப்பட்ட கொலை. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்றார்.
ரூ.10 லட்சம் நிதியுதவி
இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட விவசாயி கஜேந்திர சிங் குடும்பத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக நேற்று அறிவித்தது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குமார் விஸ்வாஸ், சஞ்சய் சிங், அசுதோஷ் ஆகியோர் இதை அறிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது:–

கஜேந்திர சிங்கின் தியாகம் வீண் போகாது. அவரது பிள்ளைகளின் கல்விச்செலவு உள்பட அனைத்து உதவிகளையும் வழங்குவோம். டெல்லி அரசு அறிவித்த மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்க மறுக்கின்றனர்.
விவசாயியை கீழே இறக்குமாறு எங்கள் கட்சியினர் கூறியபோது, அங்கிருந்த போலீஸ் இணை கமிஷனர் முகேஷ் குமார் மீனா, அது போலீசின் வேலை அல்ல என்று கூறினார். ஆனால், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பாராளுமன்றத்தில் பொய் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடல் தகனம்
இதற்கிடையே, விவசாயி கஜேந்திர சிங் உடல், நேற்று ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய மூத்த மகன் பிட்டு (வயது 12) இறுதி சடங்குகளை செய்தான்.
இதற்கிடையே, விவசாயி கஜேந்திர சிங் உடல், நேற்று ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய மூத்த மகன் பிட்டு (வயது 12) இறுதி சடங்குகளை செய்தான்.
இறுதிச்சடங்குகளில் அனைத்து கட்சியினரும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்–மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், எம்.எல்.ஏ.க்கள் அல்கா குர்ஜார், கே.எல்.மீனா, முன்னாள் மத்திய மந்திரி என்.என்.மீனா, போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கஜேந்திர சிங்கின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில பா.ஜனதா அறிவித்தது. மாநில காங்கிரசும் உதவுவதாக அறிவித்துள்ளது.