GuidePedia

அரசியலில் ஈடுபடுபவர்கள் சிறை செல்வதை நினைத்து யோசிக்கக்கூடாதென தம்பி பசில் ராஜபக்சவிற்கு தெம்பூட்டியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
மாத்தளை நகரத்தில் இன்று விகாரை கட்டிடம் திறப்புவிழாவில் கலந்து கொண்டு பேசும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
“அரசியலில் ஈடுபடுபவர்கள் சிறை செல்வதை நினைத்து யோசிக்கத் தேவையில்லை. இதுவும் அரசியலில் ஒரு அங்கம். நானும் மூன்றமாதங்கள் கம்பி எண்ணியவன்தான்.
நான் ஒரு பௌத்தன் என்ற அடிப்படையில் எந்த மதத்தையும் நிந்திக்கவோ, யாரையும் பழிதீர்க்கவோ விரும்ப மாட்டேன்.
பசில் நாட்டிற்கு வருவதற்கு இரண்டுநாட்களின் முன்னர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாட்டிற்கு வரப்போவதாக சொன்னார்.
நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என அவருக்கு கூறினேன். தவறு செய்யாத நான் எதற்காக பயப்பிட வேண்டும் என அவர் கேட்டார்” என கூறியுள்ளார்.



 
Top