GuidePedia

அஸ்கிரிய பீடாதிபதி யார் என்பது எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி தீர்மானிக்கப்பட உள்ளது.
இலங்கையின் மிக முக்கியமான பௌத்த பீடாதிபதிகளில் ஒருவராக அஸ்கிரிய பீடாதிபதி கருதப்படுகின்றார்.
அஸ்கிரிய பீடாதிபதியாக கடமையாற்றிய வந்த ஸ்ரீபுத்தரக்கித தேரர் அண்மையில் காலமானார். அதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு பொருத்தமான ஓர் பௌத்த பிக்கு தெரிவு செய்யப்பட உள்ளார்.
அஸ்கிரிய பீட செயற்குழுவைச் சேர்ந்த 18 பௌத்த பிக்குகள் நேற்று இது குறித்து கூடி ஆராய்ந்துள்ளனர்.
பல பௌத்த பிக்குகள் போட்டியிட்டால் தேர்தல் நடத்தவும் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை போட்டியின்றி தெரிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி தெரிவு செய்யப்பட உள்ள அஸ்கிரிய பீடாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் 21ம் பீடாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்கிரிய பீடாதிபதியே ஸ்ரீ தந்த புனிதப் பொருட்களின் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top