|
நிதி மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பாக நேற்று மாலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவ உதவி கோரலின் கீழ் இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
|
திவிநெகும திணைக்களத்தின் சுமார் 70 மில்லியன் ரூபாய் நிதியினை பிழையான வழியில் செலவிட்டார் என்று பசில் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நேற்றுமாலை கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்சவை எதிர்வரும் 5ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நேற்றிரவு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் அவர் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு கடுவல நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.
|
