19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி தமது நிலைப்பாட்டை உடன் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று முற்பகல் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இந்த விடயம் தொடர்பில் மற்றவர்கள் கூறும் கதைகளை ஏற்க முடியாது எனவும், நாட்டின் தலைவர் என்ற வகையில் இது தொடர்பில் அவர் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டியது கடமையாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
