GuidePedia

(இர்ஷாத் றஹ்மத்துல்லா )

முஸ்லிம் மக்கள் இரண்டு ரக்காஅத் இஸ்திகார தொழுகையினை (நலவை நாடி) தொழுதுவிட்டு ,இறைவனிடம் பிரார்த்தித்து வாக்களிப்பு நிலையங்களுககு செல்லுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் மிகவும் உருக்கமான முறையில் முஸ்லிம் சமூகத்திடம் சற்று முன்னர் கேட்டுள்ளார்.

தற்போது வாக்களிப்புஆரம்பமான நிலையில் இலங்கை முஸ்லிம்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டுமாறும்,உறவினர்கள்,பக்கத்து வீட்டார்கள்,நண்பர்கள உள்ளிட்ட வாக்குள்ளவர்களை வாக்களிக்க ஊக்கப்படுத்துமாறும்,கேட்டுள்ளார்.

அது வேளை வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து புத்தளத்தில் உள்ள மக்கள் வாக்களிக்க செல்ல முடியாத நிலையினை ஆளும் கட்சி ஏற்படுத்தியுள்ளதாகவும்,வசதி படைத்த,வாகன வசதியுள்ளவர்கள் இம்மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்கு வாகனங்களை வழங்கி உதவுமாறும் அவர் கேட்டுள்ளார்.

அதே இந்த மக்கள் எவ்வித கஷ்டமும்,தடங்களுமின்றி அல்லாஹ்விடம் துஆ கேட்டுகுமாறும் அவர் கேட்டுள்ளார்.



 
Top