இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் உள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளியேறிக்கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் நிர்வாகத்தை அமைப்பது தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அங்கு குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால் அவருக்கு தமது ஆதரவை வழங்க தயாராக உள்ளதாக, ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
